Popular Posts

Tamil actress

தமிழ் படங்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்லும் இந்த வேளையில், சிறிதும்

சிதரிபோகாத நட்சத்திரங்கள் நிறைய பேர் உண்டு. அதிலும் நடிகர் நடிகைகளின் முழு உழைப்பில் வளர்ந்தது


தமிழ்த்திரையுலகம் என்றால் அது மிகை ஆகாது. அந்தகாலத்து பிரபல நட்சத்திரங்களான பத்மினி,

கே ஆர் விஜயா, சாவித்திரி, சரோஜா தேவி, வைஜெயந்தி மாலா, போன்றோர் தமிழ்ப்பட சாம்ராஜ்யத்தின்

தூண்களாக விளங்கினர். அவர்கள் மட்டுமின்றி, கதாசிரியர்களும் திரைப்பட குழிவினர்கள் அனைவரும்

ஒரு படத்தின் வெற்றிக்கு கூட்டு முயற்சியில் உழைத்தனர். மற்ற மொழி திரைப்படங்களை விட தமிழ்

மொழி திரைப்படங்களுக்கு தனி சிறப்பு உண்டு. பொதுவாக இந்திய மொழி படங்கள் யாவும் நடிகர்களை

சுற்றியே சுழலும், நடிகைகள் அந்த கதையில் வரும் ஒரு அம்சமாகவே இருப்பார்கள். கதைக்களம் நடிகர்களை

நோக்கியும், நடிகைகளும் நடிகர்களை நோக்கியும் சுழல்வர்கள். ஆனால் தமிழ் திரைப்படங்களில்

மட்டும் நடிகைகளுக்கு தனி சிறப்பு உண்டு. கே பி சுந்தரம்பாள் மற்றும் கண்ணாம்பாள் ஆகியோர் தமிழ்

திரையுலகில் ஒரு புதிய சகாப்தத்தை படைத்தனர். அவர்கள் படங்களில் நடித்ததோடு மட்டுமில்லாமல்

பாடல்களை பாடுவதிலும் சிறந்து விளங்கினர். அவர்கள் வாழ்ந்த காலத்தை தமிழ்த்திரையுலகம் என்றுமே

நினைவில் கொள்ளும் வகையில், அவர்கிளின் படைப்பாற்றல் திகழ்ந்தது. அவர்களை தொடர்ந்து பல

நடிகைகளும் தங்கள் திறமைகளை வெளிக்கொணர்ந்தனர்.

நடுநிசியில் திரையுலகிற்கு வருகை தந்த, அமலா, ரேவதி, லக்ஷ்மி, ராதா ஆகியோர் தங்களுது

முன்னோடிகளில் இருந்து மாறுபட்டு தங்களுடைய திறமைகளை வேறு விதமாக வெளிக்கொணர

ஆரம்பித்தனர். பரதநாட்டியத்தை தவிர மற்ற மேற்கத்திய நடனங்களையும் கலந்து படங்களில் அதை அழகுற

ஆடி, கண்களுக்கு விருந்து படைத்தனர். இந்திய திரைப்படங்களிலேயே பத்ம பூஷன் விருது வாங்கிய

நடிகைகள் தமிழ் திரைப்படங்களில் தான் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. கதைக்களத்தில் நடிகர்களுக்கு

நிகராக முழு பங்கு வகித்த நடிகைகள், மக்கள் மனதில் மட்டுமல்லாமல், இந்திய இயக்குனர்கள் கண்களிலும்

நிறைந்தனர். இதன் காரணமாக தமிழ் நடிகைகள் பலர் ஹிந்தி,கன்னடா,தெலுங்கு மற்றும் மலையாள

படங்களிலும் தங்கள் திறமைகளை பறைசாற்றினார்கள். அப்படி வேறு மாநில படங்களுக்கு சென்று

நடித்து வெற்றி வகை சூடித்தந்த நடிகைகளில் ஸ்ரீ தேவி, அசின், ரேக்கா, ஹேமா மாலினி ஆகியோர்

குறிப்பிடத்தக்கோர்.

இந்த காலத்து தமிழ் நடிகைகளின் படைப்பு வேறு விதமாக மாறி இருக்கிறது. இப்பொழுது தமிழில் இருக்கும்

நடிகைகள் அனைவரும் மும்பை, டெல்லி, போன்ற வாடா இந்திய நகரங்களில் இருந்தோ, வேறு சில ஊர்களில்

இருந்தோ வந்து நடிக்கின்றனர். அவர்களை தமிழ்த்திரையுலகம் மிகவும் கவர்ந்ததுக்கான காரணம் இங்கு

அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையும் மக்களிடம் அவர்களுக்கு கிடைக்கும் வரவேற்பும். நடிகைகளும்

படத்தில் சமபங்கு வகிகின்றனர் என்பதை தமிழ் மக்கள் உணர்ந்த காரணத்தால் இன்று முழுவதுமாகவே

வேற்று மொழி கதாநாயகிகள் தமிழில் வலம் வருகின்றனர்.

நடுநிசி நடிகைகளுக்கு பின் பிரபலமான நட்சத்திரங்களாக மீனா,ரோஜா,சரிதா ஆகியோர் விளங்கினர்.

மீனாவின் நடிப்பும், ரோஜாவின் சிரிப்பும் இன்றும் தமிழ் ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொள்ளும்.

பெரும்பாலும் குடும்பக்கதைகளில் நடித்த இவர்கள் பாடல்களில் மட்டும் கவர்ச்சியாக நடித்து வந்தனர்.

அதிலும் ரோஜா சிரிப்பிலே கவர்பவர். இவர்களுக்கு அடுத்து வந்த புது நடிகைகள் கவர்ச்சியை

மையமாக கொண்டு நடித்து வந்தனர். ஆடை அலங்காரத்தில் புரட்சியை ஏற்படுத்திய நடிகைகளான

ரம்பா,குஷ்பூ,சிம்ரன்,நமீதா,ஜோதிகா,த்ரிஷா,அசின்,நயன்தாரா,பிரியாமணி ஆகியோர் தங்களுக்குள்

கடும்போட்டி கொண்டு ரசிகர்களுக்கு விருந்தளித்தனர். இவர்கள் கவர்ச்சியை தாராளமாகவும்

நடிப்பை ஏராளமாகவும் அள்ளி தந்ததால் இவர்கள் முன்னிருந்த நடிகைகளை விட பிரமாதமாக

பேசப்பட்டனர்.முற்காலத்தில் கவர்சிக்கென தனி நடிகைகள் உண்டு, அனால் இப்பொழுது கதாநாயகிகளே

கவர்ச்சியும் காட்டுவதல் தனியாக கவர்ச்சி நடிகைகள் தேவைப்படுவதில்லை. கவர்சிக்கென இருந்த

நடிகைகளான டிஸ்கோ சாந்தி,அனுராதா,சில்க் சுமிதா,குயிலி பெரும் வரவேற்ப்பை பெற்றனர்.

நடிகைகள் திறமை பெற்றவர்களாக இருந்ததால், நகைச்சுவையிலும் எந்த மொழியிலும் இல்லாத வகையில்

சிறந்து விளங்கினர்.மனோரமாவின் படைப்புகள் உலக சாதனைகளை மிஞ்சும் வகையில் அமைந்தவை.

அவர் நகைச்சுவை நடிகையாக பல வேடங்களில் நடித்துள்ளார். இதுவரை அவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட

மேடை நாடகங்களில் நடித்துள்ளார், ஆயிரத்திஐநூறு திரைப்படங்களுக்கும் மேலாக நடித்துள்ளார். இந்த

சாதனைக்கு கின்னசைவிட பெரிய சாதனையாளர் விருதை அவருக்கு வழங்கலாம். அவர் வழியை பின்பற்றி

கோவையை சேர்ந்த சரளா என்பவரும் நகைச்சுவை நடிகையாக தமிழ் திரையுலகிற்கு வருகை தந்து பல

வேடங்களில் நடித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் நடிகைகளின் சாதனைகளோ ஏராளம், படைப்போ தாராளம்.

1 comments:

Anonymous said...

Not many actress are tamils. Most of them either Malayalees or Telugu.
Sadly Tamils girls lack talents and spirit to perform in public.

Post a Comment

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Affiliate Network Reviews